/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்
ADDED : ஜூலை 23, 2024 04:48 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூருணி ஊராட்சியில் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முகாமை ஆய்வு செய்தார். அப்போது கழுகூருணி, ஆர்.எஸ்.மடை, பேராவூர், மாடக்கொட்டான், தெற்குத்தரவை, இளமனுார் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், பி.டி.ஓ., செந்தாமரைச் செல்வி, மருத்துவம், வருவாய், வேளாண் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.