/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ யோகா செய்தால் உடல் வலிமை பெறலாம் நோய் நொடியின்றி நுாறாண்டு வாழலாம் இன்று உலக யோகா தினம் யோகா செய்தால் உடல் வலிமை பெறலாம் நோய் நொடியின்றி நுாறாண்டு வாழலாம் இன்று உலக யோகா தினம்
யோகா செய்தால் உடல் வலிமை பெறலாம் நோய் நொடியின்றி நுாறாண்டு வாழலாம் இன்று உலக யோகா தினம்
யோகா செய்தால் உடல் வலிமை பெறலாம் நோய் நொடியின்றி நுாறாண்டு வாழலாம் இன்று உலக யோகா தினம்
யோகா செய்தால் உடல் வலிமை பெறலாம் நோய் நொடியின்றி நுாறாண்டு வாழலாம் இன்று உலக யோகா தினம்
ADDED : ஜூன் 21, 2024 04:13 AM

ராமநாதபுரம்: நமது முன்னோர் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சித்தர் கண்டுபிடித்த மூலிகை மருந்துகள், யோக கலைகளை முறையாக கடைப்பிடித்து நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை, பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக சிறு வயதில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு 40 முதல் 60 வயதில் உயிரை இழக்கின்றனர். இதை தவிர்க்க ஒரே வழி தினமும் 20 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்தால் கூட நோய்கள் இன்றி நிம்மதியாக வாழலாம் என்கிறது யோகாசனக்கலை.
இத்தகையை சிறப்பு மிக்க யோகாசனத்தை வளர்க்கவும், போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் உலக யோகாசன தினம் கொண்டாடப்படுகிறது. யோகா செய்வதை உடல், மனம், மூச்சுக்காற்று ஒன்றுபடுதல் என்று கூறலாம். ஆண்டு தோறும் ஜூன் 21ல் சர்வேதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
தற்போது யோக கலை எளிமையாக்கப்பட்டு ஆசனங்களை ஐந்து நிமிட தியானம் செய்வதற்குரியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. யோகா செய்வதால் இளைஞர்கள் உடல் வலிமை பெறலாம். ஆரோக்கியமாக வாழலாம்.சிறப்பு வாய்ந்த யோகாசனங்களில் சில...
விருச்சிகாசனம்: இந்த பயிற்சி செய்வதன் மூலம் முதுகுப் பகுதியின் தண்டு எலும்பு வலுப்பெறுகிறது. முதுகு சம்பந்தமான பிரச்னைகள் நீங்கி விடும்.
ஏகபாத சிரசாசனம்: இந்த பயிற்சியின் போது தொடை பகுதியானது வலுப்பெறுகிறது. சதைப்பிடிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. கை, கால்கள் வலுப்பெறுகிறது.
சக்கராசனம்: இப்பயிற்சி மூலம் வயிற்றின் தேவையற்ற சதைகள் குறைகிறது. வாயு சம்பந்தமான கோளாறுகள் நீங்குகிறது. உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.
ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள மனவளக்கலை பயிற்சி மையத்தில் தினமும் யோகா பயிற்சி செய்பவர்கள் கூறியதாவது:
ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம்
பி.எம்.ஆனந்தி 43, கேணிக்கரை: 11 ஆண்டுகளாக யோகா செய்கிறேன். தண்ணீர் தாகம், வயிற்றுப்பசி போன்றவைகளை உடல் மொழியால் நமக்கு உணர்த்துகிறது.
சித்தர்கள் சொல்லிக் கொடுத்த யோகாசனங்களை முறைப்படி கற்று தினமும் பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மருந்து, மாத்திரைகளை மறந்துவிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
நோய்,நொடியின்றி வாழலாம்
எம். வடிவம்மள் 73, மருதுபாண்டியர் நகர்: மூன்றாண்டுகளாக யோகா பயிற்சியை முறைப்படி செய்கிறேன். மூட்டு, முதுகு வலி பிரச்னை இன்றி ஆரோக்கியமாக வாழ யோகாசனம் உதவுகிறது. மன அமைதி, நிம்மதியான துாக்கம் வருகிறது. எனவே அனைவரும் கண்டிப்பாக தினமும் தியானம் செய்வது நல்லது.
நோய்களுக்கு குட்பை சொல்லலாம்
எஸ்.அபிராமி 44, ஓம்சக்தி நகர்: கடந்த 16 ஆண்டுகளாக யோகாசனம் செய்கிறேன். யோகா செய்வதால் மன அழுத்தம் குறைகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயநோய் போன்ற உடல்நல பாதிப்புகள் வராது. யோகா செய்தால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.