/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உத்தரகோசமங்கையில் ஆபத்தான நிலையில் ஹைமாஸ் விளக்குகள் உத்தரகோசமங்கையில் ஆபத்தான நிலையில் ஹைமாஸ் விளக்குகள்
உத்தரகோசமங்கையில் ஆபத்தான நிலையில் ஹைமாஸ் விளக்குகள்
உத்தரகோசமங்கையில் ஆபத்தான நிலையில் ஹைமாஸ் விளக்குகள்
உத்தரகோசமங்கையில் ஆபத்தான நிலையில் ஹைமாஸ் விளக்குகள்
ADDED : ஜூலை 13, 2024 04:28 AM

உத்தரகோசமங்கை : -உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு முன்புறம் யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் 70 அடி உயரமுள்ள உயர் கோபுர மின்விளக்கு உள்ளது.
இரவு நேரங்களில் ஹைமாஸ் விளக்குகளில் பொருத்தப்பட்டிருக்கும் ராடு போன்ற அமைப்பு சேதம் அடைந்துள்ளதால் தொங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது.
பலத்த காற்று வீசும் போது ஒருங்கிணைந்த மின் விளக்குகள் காற்றில் அங்குமிங்கும் அசைந்தாடுவதால் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உத்தரகோசமங்கை ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.