/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேய்பிறை அஷ்டமி; காலபைரவருக்கு பூஜை தேய்பிறை அஷ்டமி; காலபைரவருக்கு பூஜை
தேய்பிறை அஷ்டமி; காலபைரவருக்கு பூஜை
தேய்பிறை அஷ்டமி; காலபைரவருக்கு பூஜை
தேய்பிறை அஷ்டமி; காலபைரவருக்கு பூஜை
ADDED : ஜூலை 28, 2024 11:54 PM

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சன்னதியில் உள்ள காலபைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அபிேஷகம் நடந்தது.
காலபைரவருக்கு சந்தனம், மலர்களால் அலங்காரம் செய்யபட்டு காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கபட்டது. ஏற்பாடுகளை திருவாடானை சம்ஹார பைரவர் குழு, நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் செய்தனர்.
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் உள்ள பூவேந்தியநாதர் கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு மூலவர் காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. வெற்றிலை மாலை சாற்றப்பட்டது.
* உத்தரகோசமங்கை மங்களநாதர் சன்னதி முன்புறமுள்ள சேத்திர கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வெற்றிலை மற்றும் செவ்வரளி மாலைகள் சூட்டப்பட்டன.
* ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் உள்ள மையூரநாதப் பெருமான், பாம்பன் சுவாமி கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.