/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருச்சி சாரதாஸில் ரம்ஜானுக்கு புனித நீர் திருச்சி சாரதாஸில் ரம்ஜானுக்கு புனித நீர்
திருச்சி சாரதாஸில் ரம்ஜானுக்கு புனித நீர்
திருச்சி சாரதாஸில் ரம்ஜானுக்கு புனித நீர்
திருச்சி சாரதாஸில் ரம்ஜானுக்கு புனித நீர்
ADDED : மார் 12, 2025 07:07 AM

திருச்சி; ரம்ஜான் பண்டிகையை மக்காவின் ஜம்ஜம் புனித நீருடன் கொண்டாடும் வாய்ப்பை திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக புதுப்புது டிசைன்களில் மிகக்குறைந்த விலையில் விற்பனை நடந்து வருகிறது.
ஜவுளி வாங்கும் முஸ்லிகளுக்கு ஜம்ஜம் புனித நீருடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பை சாரதாஸ் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
மக்காவிலிருந்து ஜம்ஜம் புனித நீர் பெருமுயற்சி செய்து வரவழைத்து சாரதாஸ் இலவசமாக வழங்கி வருகிறது. குறைந்த விலையில் ஜவுளியும், கூடுதலாக ரம்ஜான் காலத்தில் மக்கா ஜம்ஜம் நீரின் மூலம் இறையருளையும் பெற்று வாடிக்கையாளர் இரட்டிப்பு மகிழ்ச்சியடைய முடியும்.
ஜம்ஜம் நீரின் சிறப்பு
புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் மக்கா நகரில் உள்ள ஜம்ஜம் ஊற்றுக் கிணற்றில் கிடைப்பது தான் ஜம்ஜம் புனித நீராகும். இந்நீர் புனிதமானதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. அசுத்தங்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் இல்லாத, நம்பமுடியாத அளவு பைகார்பனேட் (366 மி.கி/லி) இருப்பதால், பூமியில் உள்ள இயற்கை நீரின் தூய வடிவமாக இது கருதப்படுகிறது என்கின்றனர் முஸ்லிம் பெரியவர்கள்.