/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புதுமடத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் அழுத்த மின் இணைப்பு புதுமடத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் அழுத்த மின் இணைப்பு
புதுமடத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் அழுத்த மின் இணைப்பு
புதுமடத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் அழுத்த மின் இணைப்பு
புதுமடத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் அழுத்த மின் இணைப்பு
ADDED : ஜூலை 22, 2024 04:39 AM

ரெகுநாதபுரம்: -மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுமடத்தில் சேதம் அடைந்த நிலையில் உள்ள இரும்பாலான மின்கம்பம் ஆபத்தான நிலையிலும், மின் இணைப்புகள் முறையற்ற வகையில் உள்ளன.
கடந்த பத்தாண்டுகளில் சாலையின் உயரம் அதிகரித்துள்ளதால் மின்கம்பத்தில் ஒயர்கள் தாழ்வாக செல்கிறது. கனரக வாகனங்கள் பள்ளி பஸ்கள் பயணிக்கும் பொழுது குறைந்த உயரத்தில் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
புதுமடம் எஸ்.டி.பி.ஐ., கட்சி கிளைச் செயலாளர் சதாம் உசேன் கூறியதாவது: உயரழுத்த மின்கம்பத்தின் உயரம் குறைவாக இருப்பதாலும் கைக்கெட்டும் துாரத்தில் உயரழுத்த மின் கம்பிகள் செல்கிறது.
சமீபத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த போது மின்வாரியத்தில் மனு கொடுத்தது தற்காலிகமாக பழுது நீக்கம் செய்யப்பட்டது. இதுபோன்று பல இடங்களில் உயிரழுத்தம் செல்லும் வழியில் மின்கம்பத்தில் உள்ள பீங்கான் ஆபத்தாக தொங்கிக் கொண்டு இருக்கிறது.
எனவே குறைகளை நிவர்த்தி செய்ய மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.