/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஏர்வாடியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பு கீழக்கரை தாசில்தார் ஆய்வு ஏர்வாடியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பு கீழக்கரை தாசில்தார் ஆய்வு
ஏர்வாடியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பு கீழக்கரை தாசில்தார் ஆய்வு
ஏர்வாடியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பு கீழக்கரை தாசில்தார் ஆய்வு
ஏர்வாடியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பு கீழக்கரை தாசில்தார் ஆய்வு
ADDED : ஜூன் 01, 2024 04:24 AM
கீழக்கரை: ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவை முன்னிட்டு மே 9 முதல் ஜூன் 8 வரை ஏராளமான யாத்ரீகர்கள், பொதுமக்கள் வருகின்றனர்.
ஏர்வாடி தர்காவிற்கு வரும் வாகனங்களான ஆட்டோ, டூவீலருக்கு ரூ.30, கார், ஜீப் உள்ளிட்டவைகளுக்கு ரூ.80, சுற்றுலாபஸ், சரக்கு வாகனங்களுக்கு ரூ.100 நிர்ணயம் செய்து ஏர்வாடி ஊராட்சி மூலம் ஏலக் குத்தகை விடப்பட்டது.
இதில் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த குத்தகைதாரர் விதிகளை மீறி ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தின் பெயரில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. ரூ.100 ரசீதுக்கு பதில் ரூ.150 ரசீது அடித்து வசூலித்து வந்துஉள்ளனர்.
இதனால் வாகன ஓட்டிகளுக்கும், குத்தகைதாரர்களுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. வாகன ஓட்டிகளிடம் மரியாதை குறைவாகவும் அடாவடித்தனமாகவும் வசூல் செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் நேற்று முன்தினம் இரவு ஆய்வு மேற்கொண்டார். சந்தனக்கூடு விழாவிற்கு வந்த வாகனங்கள் நின்ற இடத்திற்கு சென்று கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறதா என கண்டறிந்து அவர்களிடம் வாகன வசூல் ரசீதையும் பார்வையிட்டார்.
அப்போது டிரைவர்கள் கூறியதாவது:
அதிகமான கட்டணம் வசூல் செய்கின்றனர். நாங்கள் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் நீ ஏன் வருகிறாய் திரும்பிச் செல்லுங்கள் என அடாவடியாக வசூல் செய்பவர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தனர். ஏர்வாடி ஊராட்சி பெயரில் ரூ.150 அச்சடிக்கப்பட்ட ரசீதை கீழக்கரை தாசில்தாரிடம் வாகன ஓட்டிகள் காட்டினர்.
இதன்படி குத்தகைதாரர் மற்றும் அடாவடி வசூல் செய்தவர்கள் மீது ஏர்வாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக தாசில்தார் பழனிக்குமார் தெரிவித்தார். இந்த ஆய்வில் துணை தாசில்தார்பரமசிவம் மற்றும் வருவாய் துறையினர், போலீசார் உடனிருந்தனர்.