/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தலை கழுத்து புற்று நோயால் ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் பேர் வரை பாதிப்பு தலை கழுத்து புற்று நோயால் ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் பேர் வரை பாதிப்பு
தலை கழுத்து புற்று நோயால் ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் பேர் வரை பாதிப்பு
தலை கழுத்து புற்று நோயால் ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் பேர் வரை பாதிப்பு
தலை கழுத்து புற்று நோயால் ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் பேர் வரை பாதிப்பு
ADDED : ஜூலை 28, 2024 04:21 AM

ராமநாதபுரம், : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இணைந்து தலை, கழுத்து புற்று நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை தலை, கழுத்து புற்று நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் எய்ம்ஸ் இயக்குநர் அனுமந்தராவ் ஆலோசனையின் படி தலை, கழுத்து புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் வெங்கடேசா, டாக்டர்கள் சுரேஷ், பூ கமலா, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவின் துறைத்தலைவர் ஆனந்த சொக்கலிங்கம், டாக்டர்கள் அருள்ராஜ், சோமசுந்தர், எய்ம்ஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் மங்கயற்கரசி உள்ளிட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாகராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மார்ச்வின், துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ்குமார், துணை நிலைய மருத்துவர்கள் சிவக்குமார், கண்ணகி பங்கேற்றனர்.
இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகளவில் இருப்பதாக தெரிவித்தனர். பெரும்பாலும் சிகெரட், குட்கா, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் தலை கழுத்து புற்றுநோய் வருகிறது. 10 சதவீதம் பரம்பரையாகவும், கிருமி தொற்றுகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு 14 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதில் 2 முதல் 3 லட்சம் வரை தலை, கழுத்து புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.
நோய் முற்றிய நிலையில் கழுத்தில் கட்டி ஏற்பட்ட பின்னர் தான் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது என தெரிவித்தனர். தலை, கழுத்து புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.