/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ் ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்
ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்
ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்
ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்
ADDED : ஜூலை 16, 2024 11:53 PM
ராமநாதபுரம் : கமுதி அருகே பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம்பாய்ந்தது.
கமுதி அருகே பாப்பாங்குளம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் கண்ணன் 51. இவரை பாப்பாங்குளம் பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கொலை செய்தனர்.
கமுதி போலீசார் வழக்குப்பதிந்து கொலையில் தொடர்புடைய கே.வேப்பங்குளம் முத்துராமலிங்கம் மகன் அரியப்பன் 40, கைது செய்யப்பட்டார்.
இவர்மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சந்தீஷ் எஸ்.பி., கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர்உத்தரவிட்டார்.