Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை

திருவாடானை : திருவாடானை ஒன்றியத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் நான்கு செட் சீருடைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளது.

இருப்பினும இதுவரை திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை.

ஏற்கனவே சீருடை வைத்திருக்கும் மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்கள், நடுநிலை பள்ளியிலிருந்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்காததால் சிக்கலாகியுள்ளது.

ஆசிரியர்கள் கூறுகையில், சீருடை, செருப்பு, வண்ண குச்சி மற்றும் வண்ண பென்சில்கள் இதுவரை வழங்கவில்லை என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us