/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது
சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது
சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது
சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது
ADDED : ஜூன் 14, 2024 10:23 PM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை திருப்புல்லாணி போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ரெகுநாதபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 1 மாணவி வீட்டில் இருந்தவரை காணவில்லை. பெற்றோர் திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற நைனாமரைக்கான் பகுதியை சேர்ந்த கதிரவன் மகன் பார்த்திபன் 22, சிறுமியை கடத்தியது தெரிய வந்தது.
பார்திபனை போலீசார் கைது செய்து சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.