/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தில் குப்பை பக்தர்கள் வேதனை நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தில் குப்பை பக்தர்கள் வேதனை
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தில் குப்பை பக்தர்கள் வேதனை
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தில் குப்பை பக்தர்கள் வேதனை
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தில் குப்பை பக்தர்கள் வேதனை
ADDED : ஜூலை 18, 2024 09:55 PM

பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் குப்பை நிரம்புவதால் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற பெருமை பெற்றதாக நயினார்கோவில் சவுந்தரநாயகி, நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் வருகின்றனர்.
காளஹஸ்திக்கு இணையாக உள்ள இக்கோயிலில் தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வருவோர், வாசுகி தீர்த்த குளத்தில் குளிக்க செல்வது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக குளம் பராமரிப்பின்றி கழிவுகளால் நிரம்பி வழிகிறது.
இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் நிலையில் வாசுகி தீர்த்த பாதுகாப்பு குழு என்ற பெயரில் விவசாயிகளும் தங்கள் பங்கிற்கு போராடி வருகின்றனர். ஆனால் மக்கள் பிரதிநிதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள், மற்றும் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
இதனால் குளத்தைச் சுற்றி உள்ளவர்கள் கழிவு நீரை விடும் இடமாகவும், குப்பை கொட்டும் பகுதியாகவும் பயன்படுத்துகின்றனர்.
இன்று (ஜூலை 19) முதல் ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையிலும் பல ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தீர்த்த குளத்தில் தண்ணீர் தெளித்து கோயிலுக்கு செல்வர்.
ஆனால் குளத்தின் படிக்கட்டுகள் உடைந்து வரும் நிலையில் வழுக்கி விழும் நிலை உள்ளது. ஆகவே உடனடியாக குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.