ADDED : ஜூன் 23, 2024 03:33 AM
ஆர்.எஸ்.மங்கலம்: சிலுகவயல் தாழைமடல் காளியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. மூலவர் அம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், பன்னீர்உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடந்தது.
மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் துதிப் பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோயிலின் முன்பு பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.