/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கமுதி பகுதியில் வனத்துறையினர் சோதனை கமுதி பகுதியில் வனத்துறையினர் சோதனை
கமுதி பகுதியில் வனத்துறையினர் சோதனை
கமுதி பகுதியில் வனத்துறையினர் சோதனை
கமுதி பகுதியில் வனத்துறையினர் சோதனை
ADDED : ஜூலை 16, 2024 11:55 PM
கமுதி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மான்கள் வேட்டையாடப்பட்டுள்ளதா என்பது குறித்து கல்லுப்பட்டி காலனி பகுதியில் சாயல்குடி வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கமுதி பகுதியில் குண்டாறு அதனை சுற்றியுள்ள கண்மாய் காட்டுப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வாழ்கின்றன.
தற்போது குண்டாறு அதனை ஒட்டியுள்ள கண்மாய் பகுதியில் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது. இதனால் சில சமயங்களில் மான்கள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.
இதனால் கமுதி அருகே கிராமங்களில் நாய்கள் கடித்து ஏராளமான மான்கள் உயிரிழக்கின்றன. கமுதி கோட்டைமேடு கல்லுப்பட்டி காலனி செல்லும் ரோட்டருகே மானின் கால்கள் துண்டாகி கிடந்தன.
குண்டாறு ஒட்டியுள்ள பகுதிகளில் மான்களை வேட்டையாடுகின்றனரா. அல்லது நாய்களுக்கு இரையாகிறதா என்று தெரியவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கமுதி கோட்டைமேடு அருகே கல்லுப்பட்டி காலனி பகுதியில் சாயல்குடி வன அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் மான்கள் வேட்டையாடப்பட்டுள்ளது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர்.