ADDED : ஜூலை 09, 2024 08:17 PM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தை அமாவாசை, மாசி சிவராத்திரி, ஆடித் திருக்கல்யாணம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் ஆடித்திருக்கல்யாண விழாவுக்கு ஜூலை 29ல் கோவில் அம்மன் சன்னதி முன்னுள்ள கொடி கம்பத்தில் கொடியேற்றப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆக., 4ல் ஆடி அமாவாசை, ஆக.,6ல் ஆடி தேரோட்டம், ஆக.,8ல் ஆடித் தபசு, ஆக.,9ல் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடி திருக்கல்யாணம் விழா நடக்கவுள்ளது. 17 நாட்கள் நடக்கும் ஆடித் திருவிழாவில் தினமும் கோவில் ரதவீதியில் சுவாமி, அம்மன் தங்க வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கும் என கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.