/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொடர் கெடுபிடிகளால் விழாக் காலங்களில் குறைவான எண்ணிக்கையில் கலை நிகழ்ச்சிகள் தொடர் கெடுபிடிகளால் விழாக் காலங்களில் குறைவான எண்ணிக்கையில் கலை நிகழ்ச்சிகள்
தொடர் கெடுபிடிகளால் விழாக் காலங்களில் குறைவான எண்ணிக்கையில் கலை நிகழ்ச்சிகள்
தொடர் கெடுபிடிகளால் விழாக் காலங்களில் குறைவான எண்ணிக்கையில் கலை நிகழ்ச்சிகள்
தொடர் கெடுபிடிகளால் விழாக் காலங்களில் குறைவான எண்ணிக்கையில் கலை நிகழ்ச்சிகள்
ADDED : ஜூன் 16, 2024 04:38 AM
திருப்புல்லாணி: விழாக்காலங்களில் போலீசாரின் தொடர் கெடுபிடிகளால் குறைவான எண்ணிக்கையில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளால் இத்தொழிலை நம்பியுள்ள கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுவாக கிராமங்கள்தோறும் நடக்கும் முளைக்கொட்டு உற்ஸவம், கோயில் கொடை விழா, கும்பாபிஷேகம் உள்ளிட்டவைகளுக்கு இரவு நேரங்களில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
தெம்மாங்கு இன்னிசை கலை நிகழ்ச்சி, பாட்டுக் கச்சேரி, வில்லுப்பாட்டு, மேஜிக் ஷோ, பல்சுவை கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் உள்ளிட்டவற்றை விழாக்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி பெறுவதற்கு பல்வேறு தொடர் நடைமுறைகள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது.
இதனால் பெரும்பாலான கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
பாட்டுக் கச்சேரி நடத்தும் கலைஞர்கள் கூறியதாவது:
கோயில் விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களை மையப்படுத்தி கலை நிகழ்ச்சிகள்நடத்துவதற்கு எங்களை அணுகுகின்றனர். ஆனால் போலீசார் கெடுபிடியால்குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற நடைமுறையாலும் குறைந்த நேரத்திற்கு இவ்வளவு தொகையா என்ற கேள்வியும் எழுகிறது.
இதனால் முன்பு இருந்த நிலைமாறி தற்போது விழா நிகழ்ச்சி நடத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என வேதனை தெரிவித்தனர்.கோயில் நிர்வாகிகள் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று இதற்கு ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம்வரை கலை நிகழ்ச்சிகளுக்கு செலவழிக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அதிக கெடுபிடி காட்டுகின்றனர்.
மேலும் விசேஷ காலங்களில் போலீசாரை கவனிக்க பல ஆயிரம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்குகிறது. இதனால் பெரும்பாலான கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் வெகுவாக குறைந்துள்ளது என்றனர்.