/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கூட்டுறவு பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு கூட்டுறவு பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
கூட்டுறவு பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
கூட்டுறவு பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
கூட்டுறவு பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
ADDED : ஜூலை 23, 2024 11:23 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் புதியமாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின்இணைப்பதிவாளர் ஜீனு கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம்கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் கல்விஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. பத்தாம் வகுப்பு,பிளஸ் 2, பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்கள் சேரலாம்.
விருப்பமுள்ளவர்கள் ஜூலை 31க்குள் www.tncuicm.com என்ற இணையதளத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு icmramnad@gmail.com என்ற இணையதளம் மற்றும் பட்டணம்காத்தான் ராமேஸ்வரம் ரோடு அமெரிக்கன்இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் பின்பிறம் செயல்படும் கூட்டுறவுமேலாண்மை நிலையத்தை நேரில் அல்லது 88254 11649 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.