/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வாய்க்காலில் கழிவுகளை அகற்றுவதற்கு வலியுறுத்தல் வாய்க்காலில் கழிவுகளை அகற்றுவதற்கு வலியுறுத்தல்
வாய்க்காலில் கழிவுகளை அகற்றுவதற்கு வலியுறுத்தல்
வாய்க்காலில் கழிவுகளை அகற்றுவதற்கு வலியுறுத்தல்
வாய்க்காலில் கழிவுகளை அகற்றுவதற்கு வலியுறுத்தல்
ADDED : ஜூன் 03, 2024 02:58 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோடு பகுதியில் பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற மக்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயிலிருந்து ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதி வழியாக மூன்று பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் செல்லும் வாய்க்காலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெரிய கண்மாயிலிருந்து புல்லமடை சாலை 4-வது வார்டு பகுதியில் செல்லும் வாய்க்காலில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி உள்ளன. இதனால், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வாய்க்கால் வழியாக வெளிவரும் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.