ADDED : ஜூன் 07, 2024 07:43 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள பெருங்களூரில் விஷவண்டு கடித்து முதியவர் பலியானார்.
பெருங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி, 70. இவர் நேற்று காலை அவரது வீட்டின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது விஷ வண்டு கடித்ததில் சுருண்டு விழுந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்தார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.