/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சுயவிபரங்களை இணையதளத்தில் பதிய வேண்டாம்: டி.எஸ்.பி., அறிவுரை சுயவிபரங்களை இணையதளத்தில் பதிய வேண்டாம்: டி.எஸ்.பி., அறிவுரை
சுயவிபரங்களை இணையதளத்தில் பதிய வேண்டாம்: டி.எஸ்.பி., அறிவுரை
சுயவிபரங்களை இணையதளத்தில் பதிய வேண்டாம்: டி.எஸ்.பி., அறிவுரை
சுயவிபரங்களை இணையதளத்தில் பதிய வேண்டாம்: டி.எஸ்.பி., அறிவுரை
ADDED : ஜூன் 17, 2024 12:26 AM

திருவாடானை: போக்சோ வழக்குகள் அதிகரிப்பதால் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்களது சுயவிபரங்களை இணையதளத்தில்
பதிவு செய்ய வேண்டாம் என டி.எஸ்.பி. நிரேஷ் தெரிவித்துள்ளார்.
திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தில் போலீஸ் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் பேசியதாவது: பெற்றோர்கள் பெண் குழந்தைகள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் பெருகி வருகிறது. அதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டினால் வாழ்க்கை வீணாகிவிடும்.
பெண்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். தற்போது போக்சோ வழக்குகள் அதிகமாக உள்ளது. பெண்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்கவேண்டாம். தேவையில்லாமல் தங்கள் புகைபடம் மற்றும் சுயவிபரங்களை சமூக வளைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு செய்கையில் நமக்கே தெரியாமல் குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்று பேசினார். இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, மக்கள் பங்கேற்றனர்.