/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நாயை ஏவி முயல்களை வேட்டையாடும் கும்பல் நடவடிக்கை தேவை நாயை ஏவி முயல்களை வேட்டையாடும் கும்பல் நடவடிக்கை தேவை
நாயை ஏவி முயல்களை வேட்டையாடும் கும்பல் நடவடிக்கை தேவை
நாயை ஏவி முயல்களை வேட்டையாடும் கும்பல் நடவடிக்கை தேவை
நாயை ஏவி முயல்களை வேட்டையாடும் கும்பல் நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 14, 2024 04:37 AM
சாயல்குடி: சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இரவு நேரங்களில் அடர்ந்த வனப் பகுதிகளில் வேட்டை நாய்களை ஏவி அரிய வகை முயல் இனங்களை வேட்டையாடும் கும்பல் அதிகரித்துள்ளது.
இங்குள்ள கிராமங்களில் வேட்டை நாய்களை பயன்படுத்தி இரவு நேரங்களில் மர்ம கும்பல் முயல், நட்சத்திர ஆமை, நரி உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை வேட்டையாடும் போக்கு தொடர்கிறது. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
முன்பு சாயல்குடி வனச்சரகம் சார்பில் கண்மாய்கரையோரங்கள் மற்றும் வேட்டையாடும் இடங்களை கண்டறிந்து அவற்றில் ரோந்து பணிகளை வனத்துறையினர் செய்து வந்தனர்.
சமீப காலமாக நடவடிக்கையில் ஏற்பட்ட தொய்வால் மர்ம கும்பல் வேட்டை நாய்களை வைத்து பழகி முயல், கவுதாரி உள்ளிட்டவைகளை வேட்டையாடுகின்றனர்.
எனவே சாயல்குடி வனச்சரக அலுவலர்கள் உரிய முறையில் ஆய்வு செய்து வேட்டையாடுவோரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.