/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னை நாற்றுகள் விநியோகம் தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னை நாற்றுகள் விநியோகம்
தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னை நாற்றுகள் விநியோகம்
தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னை நாற்றுகள் விநியோகம்
தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னை நாற்றுகள் விநியோகம்
ADDED : ஜூலை 22, 2024 04:37 AM
திருப்புல்லாணி: -உச்சிப்புளியில் செயல்படும் அரசு தென்னை நாற்று பண்ணைகளில் நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
உச்சிப்புளி தென்னை நாற்று பண்ணையில் பத்தாயிரம் எண்ணிக்கையில் நெட்டை ரக நாற்றுகளும், 8000 எண்ணிக்கையில் குட்டை ரக நாற்றுகளும் விற்பனைக்கு தயாராக உள்ளது. நெட்டை ரக தென்னங்கன்றுகள் ரூ.65க்கும், குட்டை ரகம் ரூ.125க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு 63837 73159 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
தென்னை நாற்றுகள் 4 ஆண்டுகளுக்குள் காய்ப்பிற்கு வந்து விடும்.