/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர் சேர்க்கை அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர் சேர்க்கை
அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர் சேர்க்கை
அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர் சேர்க்கை
அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 02, 2024 10:08 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,க்களில் 2024ம்ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 1முதல் 15 வரை நடக்கிறது.
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார், கடலாடி ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,க்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர நேரடியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
மாணவர்களுக்கு மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750, பஸ்பாஸ் உள்ளிட்ட அரசு சலுகைகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு பரமக்குடி- 04564 --231 303, ராமநாதபுரம் 04567--290 212, முதுகுளத்துார் 04576--222 114, கடலாடி 63836 54943 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., முதல்வர் வாளை ஆனந்தம் தெரிவித்துள்ளார்.