Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாதுகாப்பின்றி அம்மன் தேர் புராதனத்தை காக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பாதுகாப்பின்றி அம்மன் தேர் புராதனத்தை காக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பாதுகாப்பின்றி அம்மன் தேர் புராதனத்தை காக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பாதுகாப்பின்றி அம்மன் தேர் புராதனத்தை காக்க பக்தர்கள் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 23, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் உள்ள அம்மன் தேர் பாதுகாப்பற்ற சூழலில் நிறுத்தப்பட்டுள்ளதால் புராதனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி, நாகநாத சுவாமி கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய பெருமை பெற்றது.இக்கோயில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தை சேர்ந்த நிலையில் அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களை முதலில் நாகநாத சுவாமிக்கு எடுத்து வைப்பது வழக்கம். இதன்படி இக்கோயிலுக்கு உட்பட்ட உப கோயில் பலவற்றிற்கும் வருமானம் கொடுக்கிறது.

இந்நிலையில் ஆடி மாத விழாவில் அம்மன் அமர்ந்து செல்ல கோ ரதம் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரதம் 8 மாதங்களுக்கும் மேலாக அம்மன் சன்னதி முன்பு தெருவில் பாதுகாப்பற்ற சூழலில் நிறுத்தப்பட்டுள்ளது. தேர் நிறுத்துவதற்கு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த இடம் இடிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர் நிறுத்தும் பகுதியில் குப்பை கொட்டி அசுத்தமான சூழலில் அவ்வப்போது தீ வைக்கின்றனர்.

ஏற்கனவே வெயில், மழையில் சேதம் அடைந்து வரும் தேர், தீ விபத்தில் சிக்கும் சூழலில் ஒட்டுமொத்தமாக உருக்குலையும் அபாயம் உள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். வரும் வாரங்களில் ஆடி தேர்த் திருவிழா துவங்க உள்ள நிலையில் உடனடியாக தேரை சீரமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us