/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விடுமுறை தினத்தில் சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள் விடுமுறை தினத்தில் சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினத்தில் சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினத்தில் சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினத்தில் சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 08, 2024 06:12 AM

உத்தரகோசமங்கை : ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு உத்தரகோசமங்கை சிவன்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவன் கோயிலாகும். இங்கு மரகத நடராஜர் சன்னதி, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை மரமும், வியாசர் முனிவரின் பாதுகையும் பூஜிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் வெளி மாநில, மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
வரிசையில் காத்திருந்து மதியம் 12:00 மணிக்கு மரகத நடராஜர் சன்னதி முன்பு நடக்கும் ஸ்படிக லிங்கம், மரகதலிங்கத்திற்கான அபிஷேக தீபராதனையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.