/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காவிரி குழாய் மராமத்து பணியை விரைந்து முடிக்க கோரிக்கை காவிரி குழாய் மராமத்து பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
காவிரி குழாய் மராமத்து பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
காவிரி குழாய் மராமத்து பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
காவிரி குழாய் மராமத்து பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2024 05:46 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார்--ராமநாதபுரம் ரோடு தனியார் பள்ளி முன் நடைபெறும் காவிரி குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார்- பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முதுகுளத்தூர் ரோட்டோரத்தில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி அருகே பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் முதுகுளத்துார்-- பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே மற்றும் முதுகுளத்துார்- ராமநாதபுரம் ரோடு தனியார் பள்ளி முன்பு அடிக்கடி உடைந்து ஓடும் காவிரி குழாய் சரி செய்வதற்காக புதிய குழாய் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடக்கிறது.
ராமநாதபுரம் ரோடு என்பதால் வளைவில் குழாய் பதிக்கும் பணியால் வாகனங்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்எதிரேவரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
காவிரி குடிநீர் உதவி பொறியாளர் வடிவேல் கூறியதாவது:
முதுகுளத்தூர் பகுதியில் ஆற்றுபாலம் அருகே மற்றும் தனியார் பள்ளி முன்பு காவிரி குழாய் மராமத்து பணி நடைபெற்று வருகிறது. பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.