/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சவுதியில் இறந்த தொழிலாளி உடலை மீட்டுத்தர வலியுறுத்தல் சவுதியில் இறந்த தொழிலாளி உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்
சவுதியில் இறந்த தொழிலாளி உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்
சவுதியில் இறந்த தொழிலாளி உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்
சவுதியில் இறந்த தொழிலாளி உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2024 04:59 AM

ராமநாதபுரம்: சவுதி அரேபியா நாட்டில் இறந்த ராமநாதபுரம் மாவட்டம் மல்லல் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி அய்யப்பன் 44, உடலை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.
உத்தரகோசமங்கை அருகே மல்லல் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் சவுதி அரேபியா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்தார். நெஞ்சுவலி காரணமாக ஜூன் 20ல் அய்யப்பன் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. மனைவி ஜெயராணி, குழந்தைகள், உறவினர்களுடன் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அப்போது திடீரென அழுதபடி துக்கம் தாங்காமல் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்ணீர் கொடுத்து எழுப்பினர். அதன்பிறகு அவர் அளித்த மனுவில், தனது கணவர் அய்யப்பன் உடலை மீட்டு ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.