/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேவிபட்டினம் மெயின் ரோட்டில் கால்நடைகளால் விபத்து அபாயம் தேவிபட்டினம் மெயின் ரோட்டில் கால்நடைகளால் விபத்து அபாயம்
தேவிபட்டினம் மெயின் ரோட்டில் கால்நடைகளால் விபத்து அபாயம்
தேவிபட்டினம் மெயின் ரோட்டில் கால்நடைகளால் விபத்து அபாயம்
தேவிபட்டினம் மெயின் ரோட்டில் கால்நடைகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 07, 2024 04:54 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் பகுதியில் ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால்வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையும், திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் இணையும் முக்கியத்துவம்வாய்ந்த பகுதியாக தேவிபட்டினம் உள்ளது. இதனால் இரண்டு ரோடுகள்வழியாக வரும் வாகனங்கள், தேவிப்பட்டினத்தில் இருந்து ஒரே ரோட்டில் பயணிப்பதால் இப்பகுதியில் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் தேவிபட்டினம், கோப்பேரிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் அதிகளவில் கால்நடைகள் ரோட்டில் குறுக்கே செல்வது அதிகரித்துள்ளது. திடீரென கால்நடைகள் ரோட்டில் குறுக்கே செல்லும் போது வாகனத்தை நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர்.
குறிப்பாக அதிகளவில் டூவீலர் ஓட்டுநர்கள் பாதிப்படைகின்றனர். எனவே விபத்துகளை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.