/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பயறு வகை சாகுபடி : செயல்முறை விளக்கம் பயறு வகை சாகுபடி : செயல்முறை விளக்கம்
பயறு வகை சாகுபடி : செயல்முறை விளக்கம்
பயறு வகை சாகுபடி : செயல்முறை விளக்கம்
பயறு வகை சாகுபடி : செயல்முறை விளக்கம்
ADDED : ஜூன் 01, 2024 04:15 AM

ராமநாதபுரம்: மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தில் திருப்புல்லாணி, மாலங்குடி கிராமத்தில் பருப்பு வகை சாகுபடியில், பயறு ஒண்டர் பயன்படுத்தும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
கல்லுாரி மாணவி பா. சிந்து பிரியா விவசாயிகளுக்கு பருப்பு வகை பயிர்களில் டி.என்.ஏ.யு., பயறு ஒண்டர் என்பது பருப்பு, பயறு வகைகளுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கலந்த பூஸ்டர்.
இவற்றை பயன்படுத்தும்முறை பற்றியும் மற்றும் அதன் பயன்கள் குறித்தும்விளக்கினர். பயறு ஒண்டர் பூக்கள் உதிர்வதை குறைக்கும். பயிர் விளைச்சலை 20 சதவீதம் வரை அதிகரிக்கும். வறட்சியை தாங்கும் தன்மை உள்ளது என கூறினார். விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.