/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோயிலில் ரூ.1கோடி நகைகள் மாயம் அறநிலையத்துறைக்கு கோர்ட் உத்தரவு கோயிலில் ரூ.1கோடி நகைகள் மாயம் அறநிலையத்துறைக்கு கோர்ட் உத்தரவு
கோயிலில் ரூ.1கோடி நகைகள் மாயம் அறநிலையத்துறைக்கு கோர்ட் உத்தரவு
கோயிலில் ரூ.1கோடி நகைகள் மாயம் அறநிலையத்துறைக்கு கோர்ட் உத்தரவு
கோயிலில் ரூ.1கோடி நகைகள் மாயம் அறநிலையத்துறைக்கு கோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 08, 2024 06:38 AM
ராமநாதபுரம், : -ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஹிந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் ஆதிஜெகநாதர், பத்மாசனிதாயார் ஆகியோருக்கு அணிவிக்கும் நகைகளில் 952 கிராம் எடையுள்ள 30 தங்க நகைகள், 1199 கிராம் எடையுள்ள 16 வெள்ளி நகைகள் என ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமாகியுள்ளது.
சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் புகாரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நகை பொறுப்பாளர் கோயில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது பணிபுரிந்த கோயில் ஊழியர்கள் ராமு, சாமிதுரை, பாண்டி, கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் திவான் மகேந்திரன், ஸ்தானிகரின் அண்ணன் தெய்வசிலை ராமசாமி ஆகியோரிடம் விசாரித்தனர். ஸ்தானிகர் சீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கை விசாரித்து ஜூன் 27ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதேபோல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் சிவகங்கை ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர், மூத்த வழக்கறிஞர் ஆகியோர் நகைகளை மதிப்பீடு செய்து, நகைகள் மாயமானது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விபரங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவைகளை ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த வழக்கில் தற்போது உயர் நீதிமன்றம் கமிஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளதால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கமிஷன் விசாரணையில் உணமையான குற்றவாளிகள் சிக்க வாய்ப்புள்ளது.