ராமநாதபுரத்தில் ஜமாபந்தி துவக்கம்
ராமநாதபுரத்தில் ஜமாபந்தி துவக்கம்
ராமநாதபுரத்தில் ஜமாபந்தி துவக்கம்
ADDED : ஜூன் 11, 2024 10:51 PM
ராமநாதபுரம் : மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி) 2023- - 2024நேற்று துவங்கி (ஜூன் 11) 20 முடிய (சனி, ஞாயிறு,மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ.,ராஜமனோகரன் கோரிக்கை மனுக்களை பெற்றார்.தாசில்தார் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். பெருங்குளம்பீர்க்கா குயவன்குடி, கும்பரம், இரட்டையூருணி, காரன்உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை தொடர்பானமனுக்களை வழங்கினர்.
மக்கள் ஜமாபந்தி அலுவலரிடம்நேரடியாகவும் மற்றும் https://cmhelpline.tnega.org/support/iipgcms/ என்றஇணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் வழியாகபதிவேற்றம் செய்யலாம். இன்று ராமநாதபுரம் பீர்க்காபட்டணம்காத்தான், ஆர்.எஸ்.மடை, சூரன்கோட்டை,பழங்குளம் உள்ளிட்ட 12 கிராம மக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.