/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கமுதி தாலுகாவில் இன்று முதல் ஜமாபந்தி துவக்கம் கமுதி தாலுகாவில் இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்
கமுதி தாலுகாவில் இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்
கமுதி தாலுகாவில் இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்
கமுதி தாலுகாவில் இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்
ADDED : ஜூன் 10, 2024 11:23 PM
கமுதி : கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு இன்று(ஜூன் 11) முதல் ஜமாபந்தி நடப்பதாக கமுதி தாசில்தார் சேது ராமன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
கமுதி தாலுகாவில் 1432 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று முதல் ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் தனலெட்சுமி தலைமையில் நடக்கிறது.
இன்று (ஜூன் 11) அபிராமம் பிர்கா, ஜூன் 12ல் கமுதி கிழக்கு பிர்கா, ஜூன் 13ல் கமுதி மேற்கு பிர்கா, ஜூன் 14ல் கோவிலாங்குளம் பிர்கா, ஜூன் 18ல் பெருநாழி பிர்காவிற்குட்பட்ட கிராமங்களுக்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிக்கும் பணி நடக்கிறது.
அப்போது சம்பந்தப்பட்ட பிர்காவிற்குட்பட்ட கிராம மக்கள் தங்களது குறைகளை இ-சேவை மையம் மூலமாகவும், நேரிலும் மனுவாக அளித்து பயன்பெறலாம் என்றார்.