/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரப் பூங்கா அகற்றம் கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரப் பூங்கா அகற்றம்
கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரப் பூங்கா அகற்றம்
கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரப் பூங்கா அகற்றம்
கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரப் பூங்கா அகற்றம்
ADDED : ஜூன் 04, 2024 05:41 AM

பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்தில் பராமரிப்பு இல்லாமல் இருந்த மாதிரி சுகாதார பூங்கா முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. அவ்விடத்தை சுத்தம் செய்து, புதிதாக மக்கள் ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கைகள், பூச்செடிகள் அமைத்து புதியபூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துஉள்ளது.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் சேதுபதிநகரில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. பழைய, புதிய கலெக்டர்அலுவலக கீழ்தளம், மேல் தளத்தில் கலெக்டர்,டி.ஆர்.ஓ., கூடுதல் கலெக்டர், துணை கலெக்டர்கள், தேர்தல் பிரிவு, மக்கள் தொடர்பு மையம், முதன்மை கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், ஆதார் புகைப்பட மையம், இ.சேவை மையம், மத்தியகூட்டுறவு வங்கி என பல அலுவலங்கள் செயல்படுகின்றன. தினமும் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் வந்துசெல்கின்றனர்.
பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே மாதரி சுகாதாரப்பூங்கா அமைக்கப்பட்டது. இவ்விடம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தது.
இதையடுத்து கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவில் ஊரக வளர்ச்சிதுறை சார்பில், பயனற்ற சுகாதாரப்பூங்கா வாளகத்தை அகற்றி சுத்தம் செய்துள்ளனர். பொது மக்களுக்கு பயன்படும் வகையில் சுற்றிலும் வேலி அமைத்து அழகிய பூச்செடிகள், மரக்கன்றுகள் நட்டு புதிய பூங்கா அமைய உள்ளது.