/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தமிழில் வணிக நிறுவனத்தில் பெயர் பலகை வைப்போம் சாயல்குடி வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை தமிழில் வணிக நிறுவனத்தில் பெயர் பலகை வைப்போம் சாயல்குடி வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை
தமிழில் வணிக நிறுவனத்தில் பெயர் பலகை வைப்போம் சாயல்குடி வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை
தமிழில் வணிக நிறுவனத்தில் பெயர் பலகை வைப்போம் சாயல்குடி வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை
தமிழில் வணிக நிறுவனத்தில் பெயர் பலகை வைப்போம் சாயல்குடி வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2024 04:09 AM
சாயல்குடி: தமிழக அரசு அறிவித்துள்ளபடி அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற கருத்தை நாம் விரைவில் செயல்படுத்துவோம் என சாயல்குடி வணிகர் சங்க பேரமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாயல்குடி வணிகர் சங்க தலைவர் விஷ்ணுகாந்த் கூறியதாவது: அனைத்து கடைகளிலும், வர்த்தக வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
அதனடிப்படையில் சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், நகர்புறங்களில் வணிக நிறுவனங்களின் பெயர் முதலில் தமிழில் பெரியதாக இருக்க வேண்டும். பின் ஆங்கிலம் அல்லது ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் வைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்புடன் உள்ளோம் என்றார்.