/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சந்தன மாரியம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலம் சந்தன மாரியம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலம்
சந்தன மாரியம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலம்
சந்தன மாரியம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலம்
சந்தன மாரியம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலம்
ADDED : ஜூன் 14, 2024 04:46 AM

கமுதி: -கமுதி அருகே ராமசாமிப்பட்டி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தினந்தோறும் சந்தன மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கிராமத்தில் இருந்து முக்கிய விதிகளில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோயில் முன்பு கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சந்தன மாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் சந்தன மாரியம்மன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தார். அப்போது கிராமமக்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை ராமசாமிப்பட்டி கிராம மக்கள் செய்தனர்.