/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மறியல்: 18 பேர் கைது சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மறியல்: 18 பேர் கைது
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மறியல்: 18 பேர் கைது
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மறியல்: 18 பேர் கைது
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மறியல்: 18 பேர் கைது
ADDED : மார் 14, 2025 07:11 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். ஆட்சிக்கு வந்தால் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்தும், சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.
முன்னதாக ராமேஸ்வரம் ரோட்டில் 50 பேர் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 3 பெண்கள் உட்பட 18 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்தனர்.--