/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ செய்யது அம்மாள் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி செய்யது அம்மாள் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செய்யது அம்மாள் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செய்யது அம்மாள் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செய்யது அம்மாள் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 18, 2024 05:57 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே புல்லங்குடியில் உள்ள செய்யது அம்மாள் கலை- அறிவியல் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல் திட்ட நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நுண்ணுயிரியல் துறைத்தலைவர் காசிநாததுரை வரவேற்றார்.
உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான் பங்கேற்று பேசுகையில், சிந்தனையில் சிதைவின்றி, முயற்சியில் சோர்வின்றி, எண்ணிய செயல்களை மட்டும் எண்ணத்தில் கொண்டு திண்ணிய முயற்சிகளை தெளிவாக செயல்படுத்தினால் ஐ.ஏ.எஸ்., தேர்வு எவருக்கும் எளிது என்றார்.
கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி ஆகியோர் நிகழ்ச்சியை பாராட்டினர்.
ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர். வணிக நிர்வாகத்துறை தலைவர் ஆதிதாஸ் நன்றி கூறினார்.