/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் முகாம் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் முகாம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் முகாம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் முகாம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் முகாம்
ADDED : ஜூலை 08, 2024 06:10 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 76 முகாம்கள் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப்பகுதிகளில் செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்து கூறியதாவது:
ஜூலை 11ல் மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்க உள்ளது. 11 ஊராட்சி ஒன்றியங்களில் 76 முகாம்களில் நடக்கிறது.
இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, எரிமின்சக்திதுறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உள்ளிட்ட 15 துறைகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.
ஊரகப்பகுதிகளுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். முகாம்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் (பொ) சாந்தி பங்கேற்றனர்.