/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாயல்குடி அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயம் சாயல்குடி அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயம்
சாயல்குடி அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயம்
சாயல்குடி அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயம்
சாயல்குடி அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயம்
ADDED : ஜூன் 19, 2024 05:31 AM

சாயல்குடி : -சாயல்குடி அருகே காணிக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் தலைவனேந்தல் கிராமத்தில் உள்ள பகவதி அம்மன், பாம்பலம்மன் கோயிலில் வருடாந்திர ஆனி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. கமுதி, சாயல்குடி, சாலை வழியாக 7 கி.மீ., 5, 4 கி.மீ., எல்லை நிர்ணயிக்கப்பட்டு நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப் பாய்ந்தன.
ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட பந்தய காளைகள் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களை பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு, குத்துவிளக்கு வழங்கப்பட்டது.
வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமானோர் மாட்டு வண்டி பந்தயத்தை ரசித்தனர்.
முன்னதாக காணிக்கூர் ஊராட்சி தலைவர் செல்லப்பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.