கதவை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
கதவை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
கதவை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : ஆக 06, 2024 04:42 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே ஏ.மணக்குடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் 42. தனியார் காஸ் கம்பெனியில் பணியாற்றுகிறார். பணி நிமித்தமாக தினமும் காலையில் சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம்.
ஆக.2ல் வீட்டில் இருந்த இவரது மனைவியும் வெளியே சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணம் திருடு போனதும் தெரியவந்தது. திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.