ADDED : ஜூலை 23, 2024 09:30 PM
முதுகுளத்துார்:ராமமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார்--சாயல்குடி ரோடு விளாத்திக்கூட்டம் விலக்கு ரோட்டில் ஆடு களரி அய்யனார் கோயில் உள்ளது.
இங்கு அய்யனார், காளியம்மன், பேச்சியம்மன், மாடன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் உள்ளன. வழக்கமான பூஜைக்காக கோயிலை திறக்க பூஜாரி வந்தார். அப்போது காளியம்மன், பேச்சியம்மன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. பேரையூர் போலீசில் பூஜாரி புகார் அளித்தார். போலீசார் கோயில் சி.சி.டிவி., கேமராக்களை ஆய்வு செய்து சிலையை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.