/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிச்சை மூப்பன் வலசை கடலில் படகு போக்குவரத்து நிறுத்தம் பிச்சை மூப்பன் வலசை கடலில் படகு போக்குவரத்து நிறுத்தம்
பிச்சை மூப்பன் வலசை கடலில் படகு போக்குவரத்து நிறுத்தம்
பிச்சை மூப்பன் வலசை கடலில் படகு போக்குவரத்து நிறுத்தம்
பிச்சை மூப்பன் வலசை கடலில் படகு போக்குவரத்து நிறுத்தம்
ADDED : ஜூன் 17, 2024 12:17 AM
கீழக்கரை : -ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன் வலசையில் மன்னார் வளைகுடா கடலில் சூழலியல் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இங்கு தென்மேற்கு பருவக் காற்றின் அலைகளின் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பிச்சை மூப்பன் வலசையில் மன்னார் வளைகுடா கடலில் மணல் திட்டுடன் கூடிய சூழலியல் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.
இங்கு கடலில் அரிய வகை டேபிள் வடிவம், மனித மூளை, மான்கொம்பு, ரோஜா இதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான வடிவங்களில் பவளப்பாறைகள், கடல் புற்கள் வண்ண மீன்களை ரசித்துச் செல்வதற்கு ஏற்ற வகையில் படகின் நடுவே கண்ணாயிழையிலான படகு போக்குவரத்து உள்ளது. ஒரு படகில் 12 பேர் வீதம் பயணிக்கின்றனர்.
ஒரு நபருக்கு ரூ.200 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் முதல் பலத்த பேரலைகளின் தாக்கத்தால் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கத்தால் கடலில் பேரலைகள் அதிகமாக உள்ளது.
இதன்காரணமாக பவளப்பாறைகளை தெளிவாக காண்பது சிரமமாகும். படகுகள் பாதுகாப்பு கருதி கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை நாட்களில் படகு போக்குவரத்திற்கு செல்வதற்கு ஆர்வமுடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இதனை நம்பி அமைக்கப்பட்டுள்ள சிறு அளவிலான தின்பண்ட கடைகள், உணவகங்கள் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி பாதிப்பை சந்தித்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்; நடப்பு மாதத்தில் இருந்து ஆக., முதல் வாரம் வரை கடலில் கடலில் பேரலைகளின் தாக்கம் இருக்கும்.
அவை சீரானவுடன் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கான படகு போக்குவரத்து சேவை துவங்கும் என்றனர்.