/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்: மீன் வர்த்தகம் முடக்கம் பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்: மீன் வர்த்தகம் முடக்கம்
பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்: மீன் வர்த்தகம் முடக்கம்
பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்: மீன் வர்த்தகம் முடக்கம்
பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்: மீன் வர்த்தகம் முடக்கம்
ADDED : ஜூலை 03, 2024 02:13 AM

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள 25 மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் அருகே பாம்பன், தொண்டி அருகே நம்புதாளையைச் சேர்ந்த 25 மீனவர்கள் 4 படகுகளில் நடுக்கடலில் மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இவர்களை விடுவிக்க கோரி நேற்று முன் தினம் பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று முதல் ஜூன் 5 வரை மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று பாம்பனில் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. இதனால் மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்த 15 நாட்களில் இலங்கை கடற்படை தாக்குதல், கைது சம்பவத்தால் விசைப்படகில் 4 முறை மட்டுமே மீன் பிடிக்க சென்றனர். இதே போல் நாட்டுப்படகு மீனவரும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருவாய் இன்றி தவிக்கும் நிலை உள்ளது.