/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை காட்சி பொருளாகும் மக்கும் குப்பை மக்கா குப்பை கூடங்கள் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை காட்சி பொருளாகும் மக்கும் குப்பை மக்கா குப்பை கூடங்கள்
ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை காட்சி பொருளாகும் மக்கும் குப்பை மக்கா குப்பை கூடங்கள்
ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை காட்சி பொருளாகும் மக்கும் குப்பை மக்கா குப்பை கூடங்கள்
ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை காட்சி பொருளாகும் மக்கும் குப்பை மக்கா குப்பை கூடங்கள்
ADDED : ஜூன் 14, 2024 04:28 AM
கடலாடி: கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகளும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகளும் உள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றை உரிய முறையில் பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் பல்வேறு ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில் இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகவே உள்ளது. ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை சம்பந்தப்பட்ட ஊராட்சியில் உள்ள உரக்கிடங்கிற்கு அருகே அவற்றை பிளாஸ்டிக் குப்பையாகவும் மக்கக்கூடிய குப்பையாகவும் தரம் பிரிப்பதற்கு ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு கூரையிலான செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை முறையாக பராமரிப்பின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் குப்பையை தீவைத்து எரிக்கும் போக்கு தொடர்கிறது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை உள்ளிட்டவைகளை பிரிப்பதற்கான பயிற்சி வகுப்புகளும், கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அவை பயன்படுத்த வழியின்றி காட்சி பொருளாக உள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மண்புழு தயாரிக்க கூடிய உரக்கிடங்குகள் பயன்பாட்டின்றி காட்சி பொருளாகவும், சேதமடைந்தும் உள்ளதால் இதுக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதியும் வீணடித்துள்ளனர்.
எனவே திட்டம் சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களை செயல்படுத்த வழி இல்லாததால் இத்திட்டத்தின் நோக்கம் வெற்றி காண இயலவில்லை என பொது மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே மாவட்டம் நிர்வாகம் மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரிக்கக்கூடிய கூடங்களை செயல்படுத்தவும் அரசின் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைகிறதா என்பதையும் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.