/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாசாணி அம்மன் கோயிலில் பூக்குண்டம் மாசாணி அம்மன் கோயிலில் பூக்குண்டம்
மாசாணி அம்மன் கோயிலில் பூக்குண்டம்
மாசாணி அம்மன் கோயிலில் பூக்குண்டம்
மாசாணி அம்மன் கோயிலில் பூக்குண்டம்
ADDED : ஜூன் 22, 2024 05:09 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் மாசாணி அம்மன் கோயில் பூக்குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
பாரனுார் மாசாணியம்மன் கோயில், பூக்குண்டம் திருவிழா ஜூன் 19ல் மயான பூஜையுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பால்குடம் மற்றும் தீச்சட்டி விழா நடைபெற்றது.
முக்கிய விழாவான பூக்குண்டம் விழா நேற்று மதியம் 12:00 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் பாரனுார் ஆத்தியாடி முனீஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று மாசாணி அம்மன் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
அதைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்பு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.