/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 14, 2024 10:24 PM
ராமநாதபுரம் : சமூக நலத்துறையில் 2024-ம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழா சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனம் விருதுக்கு பெண்களின் நலன் மேம்பாட்டிற்காக பணிபுரியும் தகுதியான தனிநபர், தொண்டு நிறுவனங்கள் ஜூன் 20க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் தமிழகத்தில் பிறந்தவராகவும், 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மைக்காக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிற விருது பெற்றிருந்தால் அது பற்றிய விபரங்கள், பிறந்த தேதி, கல்வித்தகுதி போன்ற விபரங்களுடன், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நல அலுவலகத்தில் ஜூன் 30க்குள் கருத்துருவை சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.