/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி
அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி
அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி
அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி
ADDED : ஜூன் 04, 2024 06:05 AM
திருவாடானை : அங்கன்வாடியில் பயிலும் ஐந்து வயதுஉடைய மாணவர்களைக் கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
திருவாடானை யூனியனில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அவ்வகையில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில் 5 வயதுஉடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தொடக்கபள்ளி அமைந்துள்ள கிராமங்களில் 5 வயதுடைய குழந்தைகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், அவர்களையும் பள்ளியில் சேர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்து வருகின்றனர்.