/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கொழுந்தியாளை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டியவர் கைது கொழுந்தியாளை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டியவர் கைது
கொழுந்தியாளை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டியவர் கைது
கொழுந்தியாளை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டியவர் கைது
கொழுந்தியாளை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டியவர் கைது
ADDED : ஜூலை 09, 2024 04:47 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குப்பானிவலசை பகுதியில் கொழுந்தியாள் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டியவரை போலீசார்கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகே குப்பானிவலசையை சேர்ந்த சுப்பிரமணி மனைவி அமிர்தவள்ளி 50. இவரது கணவர் சுப்பிரமணி 2007 ல் குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்தார். குழந்தையில்லாத நிலையில் அமிர்தவள்ளி தனியாக வசித்து வருகிறார்.
நுாறு நாள் வேலை திட்டம், கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். அமிர்தவள்ளியின் அக்காள் கணவர் தமிழரசன்56,அமிர்தவள்ளியுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனை அமிர்தவள்ளியின் உறவினர்கள் கண்டித்ததால் தமிழரசனுடன் உள்ள தொடர்பை துண்டித்துக்கொண்டார்.
இந்நிலையில் அமிர்தவள்ளி வேலை விஷயமாக யாரிடம் பேசினாலும் சந்தேகமடைந்த தமிழரசன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். மேலும் அமிர்தவள்ளியிடம் மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
சம்பவத்தன்று சமையல் வேலைக்கு சென்று வந்த அமிர்தவள்ளி அலைபேசியில் சம்பளம் கேட்டு பேசிக்கொண்டிருந்ததை பார்த்த தமிழரசன் அரிவாளால் வெட்டினார். பின் டூவீலரில் தப்பிச் சென்றார். அமிர்தவள்ளி சகோதரர் கிருஷ்ணன் புகாரில் கேணிக்கரை போலீசார்தமிழரசனை கைது செய்தனர்.