/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 11, 2024 10:48 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கூட்டுறவு ஒன்றியத்தில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேரக்கூட்டுறவு பயிற்சிக்கு ஜூலை 19க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜீனு கூறியுள்ளதாவது: கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில்பயிற்சி காலம் ஓர் ஆண்டாகும். இரு பருவமுறைகளில் பயிற்சி நடைபெறும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 2024 ஆக., 1 முதல் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஜூன் 10 முதல் ஜூலை 19 வரை அதிகாரபூர்வ இணையதளமான www.tncu.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியில் சேர்வதற்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.100 இணைய வழியில் செலுத்த வேண்டும்.
பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தினை, சான்றிதழ் நகல்களையும் சுய ஒப்பமிட்டு மேலாண்மை நிலையத்தில் வழங்க வேண்டும். தேர்வாகும் பயிற்சியாளர்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.18 ஆயிரத்து 750 ரூபாயை ஒரே தவணையில் இணையவழியாக செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு பாங்க் ஆப் பரோடா முதல்தளம், கேணிக்கரை, ராமநாதபுரம் என்ற முகவரியில் செயல்படும் ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ, அலைபேசி எண் 88254 11649 தொடர்பு கொள்ளலாம் என்றார்.------