/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 09, 2024 04:59 AM
திருப்புல்லாணி: -திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடை அமிர்த வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு பிரசார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி தலைமை வகித்தார். முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பாலவேல் முருகன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஏ.டி.எஸ்.பி., சிவராமன், டி.எஸ்.பி., ரமேஷ், இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி, மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.